ஷா ஆலம், செப் 6- இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைப்பதோடு நோய்ப் பாதிப்பின் விளைவுகளும் குறைவாக உள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள 322 கோவிட்-19 நோயாளிகளில் 240 பேர் அல்லது 74.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 82 நோயாளிகள் அல்லது 25.5 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதோடு குறைவான தாக்கத்திற்கு உள்ளாவதை இது காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள் விரைந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டது.


