ஷா ஆலம், செப், 6- சிலாங்கூர் மாநில அரசின் இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளைப் பெறுவோர் இயங்கலை வாயிலாக வர்த்தகம் புரியஊக்குவிக்கப்படுகின்றர்.
பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த இலவச இணைய தரவு
சலுகையை பெற்றவர்கள் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இந்த திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. 17,000 பேருக்கு மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் விண்ணப்பங்களை கவனமாகக்
பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும்,இத்திட்டத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
இங்குள்ள ஹைக்கோம் பி.பி.ஆர். அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் நட்புறவு சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக இணைய சேவையை வழங்கக்கூடிய சிம் கார்டுகள் மாநிலத்தில் உள்ள 70,000 பேருக்கு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 4 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
ECONOMY
இலவச இணைய தரவு சலுகையை பெற்றவர்கள் இயங்கலை வழி வர்த்தகம் புரிய ஊக்குவிப்பு
6 செப்டெம்பர் 2021, 7:56 AM


