ECONOMY

சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 979 ஆக குறைந்தது: நாட்டில் 10,959 சம்பவங்கள் பதிவு

27 செப்டெம்பர் 2021, 9:09 AM
சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 979 ஆக குறைந்தது: நாட்டில் 10,959 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், செப் 27-  நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 10,959 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 13,104 ஆக இருந்தது.

சிலாங்கூரில்  புதிய நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 979 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சரவா மாநிலத்தில் இன்று 2,723 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நான்கு இலக்க நோய்த் தொற்றை பதிவு செய்த மற்றொரு மாநிலம் ஜோகூர் ஆகும். இம்மாநிலத்தில் 1,226 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

சபா - 751

கோலாலம்பூர்- 176

கெடா - 660

பினாங்கு-793

கிளந்தான் - 983

பேராக் - 713

நெகிரி செம்பிலான் - 110

பகாங் - 739

மலாக்கா - 346

திரங்கானு - 691

லபுவான் - 0

புத்ரா ஜெயா - 18

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.