ALAM SEKITAR & CUACA

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வெ. 1.1 கோடி வெள்ளி சொக்சோ இழப்பீடு

27 செப்டெம்பர் 2021, 3:58 AM
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வெ. 1.1 கோடி வெள்ளி சொக்சோ இழப்பீடு

பெண்டாங், செப் 27- இம்மாதம் 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வேலையிடத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கான 15,036 தொழிலாளர்களுக்கு 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை பெர்க்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

அந்த இழப்பீட்டுத் தொகையில் ஒரு கோடி வெள்ளி 13,170 உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் 10 லட்சம் வெள்ளி 1,866 அந்நியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதாக மனித வளத்துறை துணையமைச்சர் டத்தோ அவாங் ஹஷிம் கூறினார்.

இது தவிர, கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த 1,792 உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு நல்லடக்கச் சடங்குகளை மேற்கொள்வதற்காக 35 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்நோய் தொற்றினால் மரணமடைந்த இரு அந்நியத் தொழிலாளர்களுக்கு  நல்லடக்கச் சடங்கு செய்வதற்கான தொகையாக 3,500 வெள்ளி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்டாங் மாவட்ட நிலையிலான கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.