ECONOMY

நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் சற்று குறைந்து 13,889 ஆனது

25 செப்டெம்பர் 2021, 10:46 AM
நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் சற்று குறைந்து 13,889 ஆனது

ஷா ஆலம், செப் 25-  நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று  சற்று குறைந்து 13,899 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 14,554 ஆக இருந்தது. சிலாங்கூரில் நேர்வுகளின் எண்ணிக்கை 2,341 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். சரவா மாநிலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை. நேற்று 2,825 ஆக இருந்த அந்த எண்ணிக்கை இன்று 2,712 ஆக பதிவானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்த மாநிலங்களில் ஜோகூர் (1,377), கிளந்தான் (1,170), பேராக் (1,128) பினாங்கு (1,060) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- சபா – 962 பகாங் – 779 திரங்கானு – 760 கெடா– 708 மலாக்கா– 339 கோலாலம்பூர் – 310 நெ செம்பிலான்– 194 புத்ரா ஜெயா – 37 பெர்லிஸ் – 17 லபுவான் – 5

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.