ஷா ஆலம், செப்டம்பர் 24: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய 13,754 உடன் ஒப்பிடும்போது 14,554 தொற்றுகளுடன் சற்று அதிகரித்துள்ளது.
பேஸ்புக்கில் சுகாதார பொது இயக்குனரின் பகிர்தலின் அடிப்படையில், சிலாங்கூரில் புதிய நோய்த்தொற்றுகள் நேற்று 1,985 உடன் ஒப்பிடும்போது 2,244 தொற்றுகளாக அதிகரித்துள்ளன.
டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் பகிர்ந்த தரவுகளின்படி, சரவாக் அதிக எண்ணிக்கையிலான தினசரி நோய்த்தொற்றுகளை 2,825 உடன் பதிவு செய்துள்ளது மற்றும் லாபுவானில் புதிய தொற்றுகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான தொற்று விவரங்கள் இங்கே:
ஜோகூர் - 1,807
சபா - 1,273
பினாங்கு - 1,231
பேராக் - 1,144
கிளந்தான் - 910
கெடா – 908
திராங்கானு - 690
பகாங் - 598
மலாக்கா - 401
கோலாலம்பூர் - 271
நெகிரி செம்பிலான் - 157
பெர்லிஸ் - 65
புத்ராஜெயா - 30
லாபுவான் - 0


