செமினி, செப் 23- செமினி வட்டாரத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலுடன் கூடிய அடைமழையில் பாதிக்கப்பட்ட சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு உலு லங்காட் கெஅடிலான் பிரிவு மற்றும் சிலாங்கூர் மாநில நல்லெண்ண சமூக நல அமைப்பு உணவுக் கூடைகள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்கியது.
உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவரும் சிலாங்கூர் மாநில நல்லெண்ண சமூக நல அமைப்பின் ஆலோசகருமான எம். ராஜன் தலைமையில் நகராண்மைக் கழக உறுப்பினர்களான ஏ.ராமச்சந்திரன், ஹானாபி, ஜூல்கிப்ளி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகளை வழங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த புயல் மழையில் ரிஞ்சிங் தோட்டம், பண்டார் ரிஞ்சிங் செக்சன் 5 மற்றும் செக்சன் 6, தாமான் ஸ்ரீ தஞ்சோங், கம்போங் தஞ்சோங், டேசா செமினி, பெக்கான் செமினி ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் பறந்து சேதத்தை ஏற்படுத்தியதாக ராஜன் கூறினார்.


