NATIONAL

மேரு பெரிய மார்க்கெட் மற்றும் மோரிப்பில் நாளை நடமாடும் தடுப்பூசி இயக்கம்

21 செப்டெம்பர் 2021, 11:22 AM
மேரு பெரிய மார்க்கெட் மற்றும் மோரிப்பில் நாளை நடமாடும் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், செப் 21- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை கிள்ளானிலுள்ள மேரு பெரிய மார்க்கெட் வளாகத்திலும் மோரிப், ஸ்ரீ ஜூக்ரா எம்.பி.கே.கே. பாலாய் ராயாலும் நடைபெறும்.

மாநிலத்தில் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடக்கூடாது எனும் நோக்கில் நடத்தப்படும்  இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தில் பங்கேற்று பயனடையுமாறு அந்நிய நாட்டினர் உள்பட அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதோடு சரியான பற்றுச் சீட்டு குறியீட்டையும் உள்ளிட வேண்டும்

மேரு பெரிய மார்க்கெட் பகுதிக்கான நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கான குறியீடு BBK22SEP  ஆகவும் மோரிப், ஸ்ரீ ஜூக்ர பகுதிக்கான குறியீடு DM22SEP ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு இடங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த  தடுப்பூசி இயக்கம்  நடைபெறும். 

நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு கடந்த 12 ஆம் தேதி முதல் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.