ECONOMY

கம்போங் பாடாங் ஜாவா, சிஜாங்காங்கில் நாளை நடமாடும் தடுப்பூசி இயக்கம்

20 செப்டெம்பர் 2021, 9:12 AM
கம்போங் பாடாங் ஜாவா, சிஜாங்காங்கில் நாளை நடமாடும் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், செ 20-  சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை கிள்ளானில் உள்ள கம்போங் பாடாங் ஜாவா, கம்போங் மேடான், சிஜாங்காங் ஆகிய இடங்களில் நடைபெறும்.

அந்நிய நாட்டினர் உள்பட 18 வயது வயதுக்கும் மேற்பட்ட யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில்  மாநில அரசு இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதோடு சரியான பற்றுச்சீட்டு குறியீட்டையும் பதிவிட வேண்டும்.

கம்போங் பாடாங் ஜாவா பகுதிக்கான பற்றுச்சீட்டு குறியீட  DBT1SEPT   ஆகும் கம்போங் மேடான் சிஜாங்காங் பகுதிக்கான பற்றுச் சீட்டு குறியீடு                  DJ21SEP என்பதாகும்.

இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

பண்டார் பாரு கிள்ளான், பத்து தீகா, தஞ்சோங் சிப்பாட், புக்கிட் அந்தாரா பங்சா, கோம்பாக் செத்தியா, பத்தாங் காலி, பந்திங், தெராத்தாய், டிங்கில், சுபாங் ஜெயா, கம்போங் துங்கு ஆகிய 11 தொகுதிகளை இலக்காக கொண்டு இம்மாம் 12 ஆம் தேதி முதல் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.