ஷா ஆலம், செப் 20- பொருளாதார மேம்பாட்டில் எந்த தரப்பினரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய நகர்ப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை சிலாங்கூர் அரசு தீவிரப்படுத்தி வருவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.நகர்ப்புறங்களில் காணப்படும் துரித பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையை இடைவெளியை அதிகரிப்பதாகக் கூறிய அவர், சிலாங்கூர் மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல என்றார்.
முன்பு ஏழ்மை நிலை கிராமப் புற மக்களை மட்டுமே தொடர்பு படுத்தக்கூடிய விஷயமாக இருக்கும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறங்களிலும் வறுமை நிலை உருவாகிவிட்டது என்றார் அவர்.
மேம்பாட்டுத் திட்டங்களால் பொருளாதாரம் மேம்பாடு கண்டாலும் கூடவே பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஒற்றுமை மற்றும் நல்லிணக்க மன்றத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது தோன்றியுள்ள வேறுபாடு இனம்,மதம் மற்றும் சருமத்தின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை சார்ந்துள்ளது என்று அவர் .
ECONOMY
நகர்ப்புற வறுமையை ஒழிக்க திட்டம்- மந்திரி புசார் தகவல்
20 செப்டெம்பர் 2021, 6:00 AM


