ஷா ஆலம், செப் 20- கோவிட்-19 பெருந் தொற்றிலிருந்து மக்களைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கான வழிவகைகளை ஆராய சிலாங்கூர் அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தவுள்ளது.இவ்விவகாரம் தொடர்பில் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்துவார் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நடமாடும் தடுப்பூசித் திட்டத்தின் முதல் சுற்று முடிந்தவுடன், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து டாக்டர் சித்தி மரியா மற்றும் சுகாதார அமைச்சுடன் தாம் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மீட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செக்சன் 7, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற செல்வேக்ஸ் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நடப்பு தேவைக்கேற்ப நடமாடும் தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற கூடுதல் திட்டங்கள்: மாநில அரசு-சுகாதார அமைச்சு பேச்சு
20 செப்டெம்பர் 2021, 2:55 AM


