ECONOMY

நாட்டில் வயது வந்தோரில் மொத்த 76.2 சதவீதம் அல்லது 17,833,355 தனிநபர்கள் முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி ஊசி பெற்றுள்ளனர்.

16 செப்டெம்பர் 2021, 7:07 AM
நாட்டில் வயது வந்தோரில்  மொத்த 76.2 சதவீதம் அல்லது 17,833,355 தனிநபர்கள் முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி ஊசி பெற்றுள்ளனர்.

கோலாலம்பூர், செப்டம்பர் 16: கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உறுதியளிப்பு சிறப்பு குழு (JKJAV) படி, நேற்றைய நிலவரப்படி, நாட்டில் வயது வந்தோரின் மொத்த 76.2 சதவீதம் அல்லது 17,833,355 தனிநபர்கள் முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி ஊசி பெற்றுள்ளனர்.

அது, இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்போகிராஃபிக்ஸ் பகிர்வு மூலம் 92.5 சதவிகிதம் அல்லது 21,719,553 தனிநபர்கள் வயது வந்தோரில் ஒற்றை டோஸ் தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளதாக அறிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று வரை ஒற்றை டோஸ் மற்றும் இரட்டை டோஸ் தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 39,234,306 டோஸ் தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளது.

JKJAV படி."நேற்று, தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டம் (PICK) மூலம் மொத்தம் 248,410 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 24 அன்று கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப் படுத்தும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.