ஷா ஆலம், செப் 14- நாட்டில் இன்று 15,669 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 16,073 ஆக இருந்தது. நோய்த் தொற்று எண்ணிக்கை நாட்டில் இறங்குமுகமாக உள்ளதை இது காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இன்று 2,632 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 1,947 ஆக இருந்தது
சரவா மாநிலத்தில் நேற்று 3,522 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 1,983 ஆக குறைந்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களில் ஜொகூர் (19,74), சபா (1,784), பினாங்கு (1,651), கிளந்தான் (1,406), கெடா (1,207) உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- பேராக் (856), பகாங் (763), திரங்கானு (483), கோலாலம்பூர் (411), மலராக்கா (329), நெகிரி செம்பிலான் (143), பெர்லிஸ் (30), புத்ரா ஜெயா (14) லபுவான் (3).


