ஷா ஆலம், செப் 14- "பிளாட்ஸ்" எனப்படும் சிலாங்கூர் பணித்தள திட்டத்தின் வாயிலாக 4,085 வணிகர்களின் விற்பனை பொருள்களை இயங்கலை மூலம் சந்தைப்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டிலான இத்திட்டம் மாநில அரசின் உதவித் திட்டங்களுக்கு இயங்கலை வாயிலாக விண்ணப்பம் செய்யக்கூடிய இலக்கவியல் தளமாகவும் இது விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பிளாட்ஸ் அமைப்பு மாநிலத்திலுள்ள 4,085 வணிகர்களை ஒரே இலக்கவியல் தளத்தின் கீழ் ஒன்றிணைத்துள்ளது வியாபாரிகள் தங்கள் பொருள்களை சந்தைப் படுத்தும் அதேவேளையில் மாநில அரசின் திட்டங்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இதுதவிர, தடுப்பூசி மையங்களுக்கு செல்வோருக்கு கிராப் வாடகைக் கார் கட்டணக் கழிவு, இலவச இணைய தரவு சலுகை, கோ டிஜிட்டல் திட்டம் ஆகியவற்றுக்கும் இந்த பிளாட்ஸ் திட்டத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய முடியும் என்றார் அவர்.
பிளாட்ஸ் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொள்ள www.platselangor.com அகப்பக்கத்தை வலம் வரும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
பிளாட்ஸ்" திட்டத்தின் வாயிலாக 4,085 வணிகர்களுக்கு உதவி
14 செப்டெம்பர் 2021, 3:28 AM


