HEALTH

நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு (MOH) இலக்கு

11 செப்டெம்பர் 2021, 10:50 AM
நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு (MOH) இலக்கு

ஜார்ஜ் டவுன், 11 செப்டம்பர்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய பள்ளி அமர்வு தொடங்குவதற்கு முன்பு, நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு (MOH) இலக்கு வைத்துள்ளது. அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் மூன்று மில்லியன் இளைஞர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் செயல்முறை இந்த மாதம் முதலில் சில மாநிலங்களில் தொடங்கும் என்றார்.

"கல்வி அமைச்சு நாளை படிப்படியாக பள்ளிகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, மேலும் அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை ஜனவரி 2022 -க்குள் அடைவோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் இன்று பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் உடன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பினாங்கில் சுமார் 130,000 இளைஞர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் செயல்முறை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்றும் அது அவர்களின் பெற்றோர் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். "பினாங்கில் இந்த மாதத்தின் நான்காவது வாரத்தில் தொடங்கி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செயல்முறைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.

மற்ற மாநிலங்களுக்கான இளைஞர் தடுப்பூசி அட்டவணையை அடுத்த வாரம் தீர்மானிப்பேன், ”என்றார். இதற்கிடையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் முன்பு செயல்படுத்தப்பட்டதைப் போல நேரடி சந்திப்பில் பினாங்கில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயல்முறை குறித்து தனது தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கைரி கூறினார்.

நிபாங் திபாலில் உள்ள ஜாவி மாரா மையத்தின் (MEC) கோவிட் -19 தனிமைப் படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) தனிமைப்படுத்தப் படுவதற்கு ஊக்குவித்தார். பினாங்கில் உள்ள ஒன்று மற்றும் இரண்டு ஆபத்து  நிலைகளில் உள்ள நோயாளிகளை தனிமைபடுத்தும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

தற்போது PKRC MEC’ யில் படுக்கை வசதி 1,038 என்பதை அவர் புரிந்துகொண்டார், ஆனால் அதன் பயன்பாடு 500 மட்டுமே என்றும், அதனால் சுகாதார அமைச்சு ஆபத்து நிலை ஒன்று மற்றும் இரண்டுகளில் உள்ள கோவிட் -19 நோயாளிகளை அங்கு தனிமைப்படுத்தவும் ஊக்குவித்தது.

"நோய்த்தொற்று விகிதத்தை குறைக்க PKRC யில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகளை ஊக்கப்படுத்த சமூக பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை," என்று அவர் கூறினார். பாலிக் புலாவில் உள்ள சக்காட் பயிற்சி மையத்தில் (PULAZA) MOH கூடுதல் PKRC தடுப்பு முகாம் களைத் திறக்கும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.