ECONOMY

பொது முடக்க காலத்தில் மன நல பிரச்சனைகளை கவனிக்க பயிற்சியாளர்கள், அறிஞர்களும் ஒத்துழைப்பை வழங்கினர் மாநில அரசு ரிங் 5 லட்சம் ஒதுக்கீடு.

25 ஆகஸ்ட் 2021, 6:47 AM
பொது முடக்க காலத்தில் மன நல பிரச்சனைகளை கவனிக்க பயிற்சியாளர்கள், அறிஞர்களும் ஒத்துழைப்பை வழங்கினர் மாநில அரசு ரிங் 5 லட்சம் ஒதுக்கீடு.

ஷா ஆலம், 25 ஆக: தொற்றுநோய் காலத்தில் மோசமடைந்த மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசு, சிலாங்கூர் மென்டல் சேஹாட் (மன ஆரோக்கிய) திட்டத்தை உருவாக்கியது.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத், மனநலப் பிரச்சினைகள் அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, முன்களப் பணியாளர்களிடமும் ஏற்பட்டது என்று கூறினார்.

"எனவே, மாநில அரசு மிகவும் முழுமையான முயற்சியை மேற்கொண்டது, சேஹாட் RM500,000 ஒதுக்கீடு மூலம் மன நல மேம்பாடு, விழிப்புணர்வு, ஆரம்ப பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேர்ச்சிப் பெற்ற ஆலோசகர்களின் பயிற்சி வழங்கப் பட்டது.

"இதில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா, யுனிவர்சிட்டி துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் என்ஜிஓக்கள் (மியாசா) ஆகியவற்றின் பயிற்சியாளர்கள், அறிஞர்களும் ஒத்துழைப்பை வழங்கினர்." என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் கூறினார்.

அது தவிர, ஜூலை வரை சிலாங்கூர் மாநில செயலாளர் அலுவலகத்தால் ஆலோசனை சேவைகள் மூலம் மொத்தம் 17 மனநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சித்தி மரியா கூறினார்.

இதே காலகட்டத்தில் மற்ற பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 420 புகார்கள் பெறப்பட்டன என்றார். மலேசிய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள், மனநல சமூக உதவி உதவிக்கான மொத்த 122,328 அழைப்புகளை ஜனவரி 1 முதல் ஜூன் 18 வரை நாடு முழுவதும் பெற்றன, இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம்  என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.