HEADERAD

சிலாங்கூர் நோயாளிகளுக்கு பெகாவானிசும் உதவுகிறது

24 ஆகஸ்ட் 2021, 5:16 AM
சிலாங்கூர் நோயாளிகளுக்கு  பெகாவானிசும் உதவுகிறது

ஷா ஆலம், 24 ஆக: இந்த ஆண்டு 44 மாநில சட்டமன்றங்களில் (DUN) உள்ள நோயாளிகளுக்கு, குறிப்பாக நீண்டநாட்கள் விலை உயர்ந்த மருந்து உதவி தேவைப் படும் நோயுற்றவர்களுக்கு உதவ சிலாங்கூர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் மனைவிமார்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெகாவானிஸ்) மொத்தம் RM220,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன் தலைவர் டத்தின் ஶ்ரீ மஸ்தியானா முஹம்மது கூறுகையில் ஜியாரா மெடிக் பெகாவானிஸ் என்னும் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருந்துகளை வாங்குவதற்கான சுமையை குறைப்பதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது என்றார்.

"இந்த நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் RM250 மருந்து மற்றும் அன்றாட தேவைகளை வாங்குவதற்கு வழங்கப்படுகிறது. தகுதியான பெறுநர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்களால் நோயாளிகள் மற்றும் அவர் குடும்ப நிலைக் குறித்த தகவல்களை சங்கத்துக்கு அனுப்பிவைப்பார்கள் என்றார்.

"இந்த உதவி, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது அவர்களின் சுமையை குறைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

டத்தோ மந்திரி புசாரின் மனைவி, பெகாவானிஸ் எதிர்காலத்தில் முன்னணி ஊழியர்களுக்கு ஹெல்த் கிட் நன்கொடைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

"நாங்கள் அந்த திட்டத்தில் அடங்கும் பொருட்கள் குறித்து ஒரு குறிப்பை கொண்டுள்ளோம் இருப்பினும் கிட்டில் உள்ள உபகரணங்கள் குறித்து பிறகு அறிவிப்போம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.