ECONOMY

உண்மையாகவே தொற்றுநோயை சமாளிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் பேரமா?

22 ஆகஸ்ட் 2021, 12:23 PM
உண்மையாகவே  தொற்றுநோயை சமாளிக்க எதிர்க்கட்சி  உறுப்பினர்களுடன் பிரதமர் பேரமா?

 கோலாலம்பூர், 22 ஆக: டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று பிரதமராக தனது தொடக்க உரையில் எதிர்க்கட்சி தலைமைக்கு தேசிய நடவடிக்கை கவுன்சில் (MPN) மற்றும் கோவிட் -19 ஐ சமாளிக்க சிறப்பு குழுவில் சேர அழைப்பு விட்டார்.

அதிகாரப் போட்டியைத் தீர்க்கவும், மக்களின் அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டு வரவும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள அவர்,  எதிர்கட்சிகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவது உட்பட, ஒற்றுமை மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை உடனடியாக அடைய வேண்டும் என்றார்.

"14 வது பொதுத் தேர்தலுக்கு முடிந்த குறுகிய காலத்தில் நாடு இரண்டு அரசு மாற்றங்கள் மற்றும் இரண்டு பிரதமர்களைக் கடந்துவிட்டது. 15 வது பொதுத்தேர்தலுக்கு 21 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் "உண்மையில், இந்த மாற்றம் மக்களுக்கும் நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு அரசியல் செயலாகும்," என்று அவர் இன்று கூறினார்.

வானொலி டெலிவிசியன் மலேசியா (RTM), பெர்டுபுஹான் பெரிடா நேஷனல் மலேசியா (பெர்னாமா), TV3, ஆஸ்ட்ரோ அவானி மற்றும் டிவி அல்ஹிஜ்ராவின் ஊடக தளங்களில் இந்த பேச்சு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் கட்டளைக்கு இணங்க, அனைவரும் மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு குழுவில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

"மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வை அடைய அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்துவிடுமாறு அண்மையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் அனைவரையும் பேரரசர் கேட்டு கொண்டார்.

இதற்கிடையில், சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை உடனடியாக மீட்க உதவும் ஒரு நிர்வாகக் குழுவை தனது அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய பிரதமர், மக்களின் நம்பிக்கை வீணாக்கவில்லை என்பதை நிரூபிக்க சிறந்த முடிவுகளை வழங்குவதாக உறுதியளித்தார். நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக அரசு ஊழியர்களால் ஆதரிக்கப்படும் முழு நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மூலம் மட்டுமே இந்த விருப்பத்தை அடைய முடியும் என்றார்.

"மலேசிய குடும்பம்" என ஒன்றுபட்டு வாழ்ந்த வாழ்வின் நல்வாழ்வையும் ஆறுதலையும் மீட்டெடுப்போம். மக்களுடன் இணைந்து பணியாற்ற நான் உறுதியாக உள்ளேன், ”என்றார்.

பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்து ஆகஸ்ட் 16 அன்று ராஜினாமா செய்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினுக்கு பதிலாக, இஸ்தானா நெகாராவில், அல்-சுல்தான் அப்துல்லாவுக்கு முன்னால்,  பிரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி நேற்று பிரதமராக பதவியேற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.