ஷா ஆலம், ஆக19: சுபாங் ஜெயா மாநில சட்டசபை (DUN) அலுவலகம் இந்த ஆண்டு இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவால் (PKP) பாதிக்கப்பட்ட 3,554 பேருக்கு உணவு உதவி வழங்க RM300,000 க்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) மிக்கேல் இங், ஒவ்வொரு பெறுநரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் பெறக்கூடிய RM100 மதிப்புள்ள உணவு கூடை மற்றும் அதற்கான வவுச்சர்களைப் பெற்றதாகக் கூறினார்.
சில பெறுநர்களுக்கு அவர்களின் ஆரோக்கிய நிலைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உணவு தேவைப்படுவதால் உணவு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. "அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப உணவுப் பொருட்களைத் தேர்வு செய்யலாம், எனவே நாங்கள் வழக்கமாக வழங்கும் உதவியை வழங்கினால் சில அவர்களுக்கு பயனற்றதாக அமைந்து விடுகிறது என்றார்.
"அது தவிர, PKP இன் போது அதிகமான குடியிருப்பாளர்களுக்கு உதவிகள் கிட்ட, நன்கொடை வழி உதவ முன்வந்த நன்கொடையாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று அவர் இன்று இங்கு ஹோட்டல் டி பால்மா தடுப்பூசி மையத்தில் (PPV) சந்தித்தபோது கூறினார்.
ஜூன் 9 அன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, ஒவ்வொரு மாநிலத் தொகுதியும் கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பின் கீழ் உணவு கூடை திட்டத்தின் மூலம் கூடுதல் RM50,000 பெறும் என்று அறிவித்தார்.
மாநில அரசு மக்களின் நலன் மற்றும் உயிர்வாழ்வைப் கவனத்தில் கொண்டு கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கியது, பக்காத்தான் ஹரப்பான் எம்.பி.க்களுக்கும் RM30,000 ஒதுக்கப்பட்டது. RM551.56 மில்லியன் மதிப்புள்ள கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பு மூன்று உத்திகள் மற்றும் 25 திட்டங்களை உள்ளடக்கியது, இது குறைந்தது 1.6 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்றார அவர்


