ECONOMY

கோவிட் -19 தொற்று எதிராக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 1,000 தொண்டர்களுக்கு பயிற்சி

18 ஆகஸ்ட் 2021, 9:49 AM
கோவிட் -19 தொற்று எதிராக  சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 1,000  தொண்டர்களுக்கு பயிற்சி

ஷா ஆலம், 18 ஆக: கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான சமூக மட்டத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலாங்கூர் சமூக சுகாதார தொண்டர்களை (சுகா) மாநில அரசு உருவாக்கியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களுக்கு கோவிட் -19 கருப்பொருள் விளக்கங்களுடன் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"நோயாளி மேலாண்மை, வீட்டில் கோவிட் -19 பரிசோதனை,  வீட்டில் மதிப்பீட்டு கருவிகளின் பயன்பாடு மற்றும் பல  திறன்கள் தொழில் ரீதியாக கற்பிக்கப்படும்.

"சுகா மூலம், தன்னார்வத் தன்மையை சமூகத்தில் வளர்க்க முடியும்," என்று அவர் இன்று பேஸ்புக் வழியாக கூறினார்.

மேல் விவரங்களுக்கு sukakomuniti2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது www.sukasociety.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றார்.

இதற்கிடையில், இன்போகிராஃபிக்ஸ் பகிர்வதன் மூலம், தன்னார்வலர்கள் ஆரோக்கியமான பராமரிப்பு காப்பீட்டுத் திட்டம் (SIPS), தன்னார்வத் தொகுப்புகள் மற்றும் வழக்கமான பயிற்சிகளை இலவசமாகப் பெறுவார்கள் என்று அமிருடின் தெரிவித்தார்.

முன்கூட்டியே பதிவு செய்யும் சுமார் 1,000 நபர்கள் இத்திட்டத்தின் வழி பலனைப் பெறுவார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.