ஷா ஆலம், ஆக 15- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து 19631 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 19,740 ஆக இருந்தது.
சிலாங்கூரில் நோய்த் தொற்று சம்பவங்கள் 5000 ல் நிலைத்துவருகிறது. இன்று 5751 ஆக உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஏழு மாநிலங்களில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் (1,765), ஜொகூர் (1,309), சபா (2103), கெடா (1,863), பினாங்கு (1275), கிளந்தான் (1,268), பேராக் (1,101) ஆகியவையே அந்த மாநிலங்களாகும்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சரவா (835), பகாங் (670), நெகிரி செம்பிலான் (490) மலாக்கா (623), திரங்கானு (498), புத்ரா ஜெயா (41), பெர்லிஸ் (37), லபுவான் (0).


