ஷா ஆலம், ஆகஸ்ட் 17: கோவிட் -19 தொற்றுநோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து கின்ராரா மாநில சட்டசபை தொகுதியை (DUN) சுற்றியுள்ள மக்களுக்கு 5,000 க்கும் மேற்பட்ட உணவு கூடைகள் விநியோகிக்கப் பட்டுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் இங் ஹி ஹான் தனது கட்சியினர் 10 டன் காய்கறிகள் மற்றும் ஐந்து டன் புதிய மீன்களை பல குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுமையை குறைக்கும் முயற்சியாக வழங்கியதாக கூறினார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கின்ராரா சமையலறை திட்டத்தின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு மொத்தம் 500 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்படுகின்றன.
"குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவியளிப்போம்," என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.
கின்ராரா சமையலறை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மையப்படுத்தப்பட்ட சமையலறையாக உருவாக்கப்பட்டது, இது தேவைப்படுபவர்களுக்கு இலவச மதிய உணவை விநியோகிக்கும்.
இந்த திட்டம் இரண்டு இடங்களில் இயங்கியது மக்களின் ஊக்கமளிக்கும் ஆதரவை பெற்றது.
ECONOMY
கின்ராரா மாநில சட்டசபை மக்களுக்கு 5,000 க்கும் மேற்பட்ட உணவு கூடைகள்
17 ஆகஸ்ட் 2021, 8:23 AM


