ஷா ஆலம், ஆகஸ்ட் 17: யாங் டி-பெர்துவான் அகோங் புதிய பிரதமருக்கான வேட்பாளரை நாளை மாலை 4 மணிக்குள் பரிந்துரைக்குமாறு அனைத்து எம்.பி.க்களும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப் படுகிறார், அதனை, கர்னல் டத்தோக் நாசிம் முகமட் ஆலிம், மாட்சிமை தங்கிய பேரரசரின் மூத்த தனிப்பட்ட செயலாளருக்கு மின்னஞ்சல், முகநூல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கலாம்.
டேவான் ராக்யாட் சபாநாயகர் டத்தோ அசார் ஹருன் எம்.பி.க்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த உத்தரவு குறிப்பிடப்பட்டுள்ளது. பார்டி கெஅடிலன் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கடிதத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் செய்திகள் பின்தொடர்கின்றன


