ECONOMY

அம்பாங்கில் உள்ள நெடுஞ்சாலை தொழில் ஒப்பந்ததாரர் 'தண்ணீரைத் திருடுகின்றனர்'

17 ஆகஸ்ட் 2021, 4:39 AM
அம்பாங்கில் உள்ள நெடுஞ்சாலை தொழில் ஒப்பந்ததாரர் 'தண்ணீரைத் திருடுகின்றனர்'

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: அம்பாங் ஜெயாவில் உள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர், கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்ற சட்டவிரோத நீர் இணைப்பை செய்துள்ளது கண்டறியப்பட்டதாக தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற நடவடிக்கையால் 60 பயனீட்டாளர் கணக்குகள் திட்டமிடப்படாத நீர் தடங்கல்களை அனுபவித்ததாக நிறுவனம் கூறியது.

உளவுத்துறை தகவலைப் பெற்ற பிறகு, திட்ட தளத்தில் ஆயர் சிலாங்கூர் (பெங்குருசன் ஏர் சிலாங்கூர் எஸ்.டி.என் பிஎச்.டி) உடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

"அந்த இடத்தில் உள்ள குளோரின் சோதனை ஒப்பந்ததாரர் பயன்படுத்தும் நீர் வழங்கல் ஆயர் சிலாங்கூருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியது," என்று அவர் நேற்று இரவு பேஸ்புக்கில் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, நீர் சேவை தொழில் சட்டம் 2006 (சட்டம் 655) பிரிவு 125 -ன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றவாளிக்கு RM50,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

பயனீட்டாளர் கணக்குகள் இனி பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய சீர்குலைந்த நீர் விநியோக அமைப்பு சரி செய்யப் பட்டது.

"சட்டவிரோத இணைப்புகளை உருவாக்குவது உட்பட சுத்தமான நீர் விநியோகத்தை திருடும் செயல்பாடு இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு மக்கள் கேட்கப் படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.