ஷா ஆலம், ஆக 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இன்று சற்று குறைந்து 20,670 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 21,468 ஆக இருந்தது.
சிலாங்கூரிலும் நேற்று 7,449 ஆக இருந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 6,606 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோலாலம்பூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை 2,028 ஆக பதிவான வேளையில் மேலும் ஆறு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை நான்கு இலக்கங்களில் பதிவானதாக அவர் கூறினார்.
கெடா (1,796), சபா (1,752), ஜொகூர் (1,425), கிளந்தான் (1,370), பினாங்கு (1,251), பேராக் 1,003) ஆகியவையே அம்மாநிலங்களாகும்.
மாநில வாரியாக நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
பகாங் (794), நெகிரி செம்பிலான் (727), சரவா (725), திரங்கானு (560), மலாக்கா (521), பெர்லிஸ் (61), புத்ரா ஜெயா (51), லபுவான் (0).


