கோலாலம்பூர், ஆக 12- பிக் எனப்படும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை நாட்டில் 2 கோடியே 58 லட்சத்து 63 ஆயிரத்து 563 டோஸ் தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் அடங்கிய விளக்கப்படத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
இதுவரை 1 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 422 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றள்ளதாக கூறிய அவர், மேலும் 95 லட்சத்து 16 ஆயிரத்து 141 பேர் இரண்டாது தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்றார்.
விகிதார அடிப்படையில் பார்க்கையில் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 50.1 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 29.1 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
நேற்று நாட்டில் 497,352 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 227,506 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 269,846 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.


