![]() ![]() |
|||
ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 42.2 விழுக்காட்டினர் அதாவது 20 லட்சத்து 10 ஆயிரம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 56 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவர்களில் 36 லட்சத்து 40 ஆயிரம் பேர் அல்லது 76.7 விழுக்காட்டினர் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மேலும் 266,069 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆம் தேதி நாடு முழுவதும் செலுத்தப்பட்ட 357,981 தடுப்பூசிகளில் 102,819 தடுப்பூசிகள் சிலாங்கூரில் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு நேற்று கூறியிருந்தது.



