கோலாலம்பூர், ஆக 11- ரிக்டர் அளவைக் கருவியில் 5.6 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தென் சுமத்ரா பகுதியை இன்று பிற்பகல் 1.19 மணியளவில் உலுக்கியது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்த பூகம்பம் இந்தோனேசியாவின் தென்கிழக்கிலுள்ள பாடாங் சிடேம்புவானிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் 19 கிலோமீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்தது. எனினும், இந்த நில நடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து ஏற்படவில்லை.


