ஷா ஆலம், ஆக 11-நாடு இரண்டாவது முறையாக மிக அதிகமான கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையை இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நேர்வுகளின் எண்ணிக்கை 20,780 ஆக உள்ள நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை உயரிய அளவில் 20,899 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சிலாங்கூரைப் பொறுத்த வரை இன்று 6,921 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 7,338 ஆக இருந்தது.
கோலாலம்பூரிலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,065 ஆக உயர்வு கண்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் ஜொகூர் (1,693), கெடா (1,534), சபா (1,514), பினாங்கு (1,385), கிளந்தான் (1,284), நெகிரி செம்பிலான் (1,015) ஆகியவை உள்ளன.
பேராக்கில் 828 நேர்வுகளும் சரவாவில் 634 நேர்வுகளும் மலாக்காவில் 636 நேர்வுகளும் திரங்கானுவில் 613 நேர்வுகளும் பகாங்கில் 585 நேர்வுகளும் பதிவாகியுள்ளன.
மேலும் புத்ரா ஜெயாவில் 41 பேரும் பெரிலிசில் 29 பேரும் லபுவானில் மூவரும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


