கோலாலம்பூர், ஆக 11- நாட்டில் நேற்று 10 - 08 - 2021 தொடங்கி இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள இஸ்லாமியர் அல்லாதார் தங்கள் வழிபாடு தளங்களில் வழிபாடுகளில் பங்குக்கொள்ளலாம்.
தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் அடங்கிய அறிப்புகளை மைசெஜாத்ரா வழி வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, வெளியூர்களில் தங்கி இருக்கும் அல்லது கல்விப் பயிலும் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பெற்றோர்கள் சந்திக்கவும், தொழில் நிமித்தம் வெளியூர்களில் அல்லது பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்த கணவன்- மனைவியிம் நேரில் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளதாக மைசெஜாத்ரா வழி அறிப்புகளை பகிர்ந்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள இஸ்லாமியர் அல்லாதார் தங்கள் வழிபாடு தளங்களில் வழிபாடுகளில் பங்குக்கொள்ள அனுமதிக்கும் அதே வேளையில் இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ள இஸ்லாமியர்களுக்கும் அந்த தளர்வுகள் பொருந்தும் இருப்பினும் அந்தந்த மாநிலங்களின் சமய பகுதி வழிகாட்டுதல்களை அவர்கள் பின் பற்றி நடக்க அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பு கேட்டுக்கொள்கிறது.
நேற்றுவரையிலான, விகிதார அடிப்படையில் பார்க்கையில் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 39.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையையும் பெற்றுள்ளனர், அதனால் அவர்கள் பயனடைவர்.


