ஷா ஆலம், ஆக 10- கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியுடன் செயல்படுவோம் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
அதே சமயம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம்களுக்கு மால் ஹிஜ்ரா புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் வலுவான மனோதிடத்துடன் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உதவி புரிவதை நாம் வழக்கமாக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேற முடியும் என்றார் அவர்.
சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் மாற்றங்களை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமிருடின் வலியுறுத்தினார். மாற்றத்திற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதுவே நமது வெற்றியைத் தீர்மானிக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.


