ஷா ஆலம், ஆக 10- அண்மைய சில தினங்களாக குறைந்து வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று மறுபடியும் உயர்வு கண்டது. இன்று அந்நோய்க்கு 19,991 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 17,236 ஆக இருந்தது.
சிலாங்கூரிலும் நேற்று 5,740 ஆக இருந்த கோவிட்-19 நோய் கண்டவர்களின் புதிய எண்ணிக்கை இன்று 7,338 ஆக உயர்ந்தது.
நேற்று 1,567 சம்பவங்களைப் பதிவு செய்த கோலாலம்பூர், இன்று 2,374 சம்பவங்களுடன் அபரிமித அதிகரிப்பைக் கண்டது. கெடாவிலும் நேர்வுகளின் எண்ணிக்கை 1,328இல் இருந்து 1,830 ஆக உயர்வு கண்டது.
சபா, ஜொகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 1,383, 1,344 மற்றும் 1,030 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-
பேராக் ((953), சரவா (836), பினாங்கு (743), மலாக்கா (578), நெகிரி செம்பிலான் (564), பகாங் (539), திரங்கானு (378), புத்ரா ஜெயா (76), பெர்லிஸ் (24), லபுவான் (1).


