கோலாலம்பூர், ஆக 10- நாட்டில் நேற்று புதிதாக 36 கோவிட்-19 நோய்த் தொற்று மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 19 தொற்று மையங்கள் தொழிற்சாலைகளை உள்ளடக்கியவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மேலும் 13 தொற்று மையங்கள் சமூகத்தின் வாயிலாக பரவிய வேளையில் இரண்டு தொற்று மையங்கள் தடுப்பூக் காவல் முகாம்களிலும் தலா ஒன்று நோய்த்தொற்று தாக்கம் கொண்டவர்கள் மற்றும் சமய நிகழ்வுகளிலும் பரவியதாக அவர் சொன்னார்.
வேலையிட தொற்று மையங்களைப் பொறுத்த வரை ஜொகூரில் மிக அதிகமாக அதாவது 8 தொற்று மையங்களும் சிலாங்கூரில் 4 மையங்களும் கெடாவில் இரு மையங்களும் கிளந்தான், பெர்லிஸ், திரங்கானு, பினாங்கு, சரவா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொற்று மையமும் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.
சமூகத்தின் வழி பரவும் தொற்று மையங்களின் எண்ணிக்கையில் கிளந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 212 பேர் பலியானதாக கூறிய அவர், அவர்களில் 16 பேர் வீட்டில் அல்லது மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்ததாக அவர் மேலும் சொன்னார்.


