ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடற்றவர்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிமுறையை மாநில அரசு ஆராயும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.இவ்விவகாரம் தொடர்பில் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செலங்கா செயலி வாயிலாக இத்தகைய நபர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இத்தரப்பினரிடம் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தடுப்பூசி பெறுவதற்கான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் தாங்கள் புகார்களை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
ECONOMY
நாடற்றவர்கள், ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி: வழிமுறை ஆராயப்படும்
9 ஆகஸ்ட் 2021, 12:09 PM


