கோலாலம்பூர், ஆக 9- பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தை நிராகரிக்கும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் கடந்த வாரம் அறிவித்ததைப் போல் அரசாங்கத்தை நிராகரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டு அல்லது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டு 4ஆம் தேதியன்று அதாவது இவ்விவகாரம் தொடர்பில் சிறப்பு அறிவிப்பை பிரதமர் வெளியிட்ட அதே தினத்தன்று அவரது அரசாங்கத்தை நிராகரிக்கும் அம்னோ எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமரப்பித்துள்ளார்.
தமக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தாம் கடிதம் பெற்றுள்ளதாக கூறும் கடிதத்தை தாம் மாட்சிமை தங்கிய மாமன்னரிடமிருந்து பெற்றுள்ளதாக பிரதமர் அந்த சிறப்பு அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வது தொடர்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கடிதங்களை அம்னோ கட்சியின் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.


