ஷா ஆலம், 7- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற ஷா ஆலமில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு செல்வோருக்கு மேரு சட்டமன்ற தொகுதி இலவச பஸ் சேவையை ஏற்பாடு செய்துள்ளது.இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கிள்ளான் சென்ட்ரல் பஸ் முனையத்திலிருந்து ஷா ஆலம், டி பல்மா ஹோட்டலில் தடுப்பூசி மையத்திற்கு அந்த பஸ் சேவை வழங்கப்படும் என்று தொகுதி உறுப்பினர் ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார்,கூறினார்.
இந்த சேவைக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்கள் பயன்படுத்தப்படும் எனக் கூறிய அவர், கிள்ளான் சென்ட்ரல் முனையத்திலிருந்து பஸ் புறப்படும் நேரம் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றார்.
இதர தவிர, சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள கிராப் வாடகைக் கார் மூலம் தடுப்பூசி மையத்திற்கு செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி திட்டம் சுணக்கமின்றி சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்த வருவோர் முன்கூட்டியே செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
ECONOMY
தடுப்பூசி மையத்திற்கு செல்ல இலவச பஸ் சேவை: மேரு உறுப்பினர் ஏற்பாடு
7 ஆகஸ்ட் 2021, 8:05 AM


