ECONOMY

திடக் கழிவு அகற்றும் நிறுவனத்தின் துப்புரவுச் சேவைகள் அட்டவணைப்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

7 ஆகஸ்ட் 2021, 7:42 AM
திடக் கழிவு அகற்றும் நிறுவனத்தின்  துப்புரவுச் சேவைகள் அட்டவணைப்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 7: KDEB திடக் கழிவு அகற்றும் நிறுவனம் Sdn Bhd (KDEBWM)  அதன் பொதுத் துப்புரவுச் சேவைகள் அட்டவணைப்படி செயல்படுத்தப் படுவதை உறுதி செய்யவேண்டும்.

அதன்  இடர் ஆதரவு ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுததவேண்டும்.  கோவிட் -19 ஐத் தடுக்க தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டால், வண்டிகள் கிருமி நாஷினியை கொண்டு கழுவ கொண்டு செல்லப் பட்டால், அன்றாட துப்புரவுப் பணியில் சுணக்கம் ஏற்படுத்தலாம் என்பதற்கில்லை, சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநகரில் துப்பரவு சேவைகளில் இடையூறுகளைச் சமாளிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் தொடர்புத் தலைவர் கூறினார்.

"திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு சேவைகள் அட்டவணைப்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய KDEBWM ஆதரவு ஊழியர்களின் சேவைகளை நாடுகிறது" என்று மஹ்ஃபுசா முஹம்மது தர்மிடி நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

வண்டிகள் தூய்மைப்படுத்துவது மற்றும் தொழிலாளர் பரிசோதனைகளில் சேவை இடையூறு ஏற்பட்ட பகுதிகள் SS17 மற்றும் SS19, USJ1 இன் தொழில்துறை பகுதியின் ஒரு பகுதி, USJ1 மற்றும் USJ2 இன் ஒரு பகுதி, மற்றும் தாமான் பூச்சோங் உத்தமா மற்றும் தாமான் பூச்சோங் உத்தமா 7 இன் ஒரு பகுதி.

அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கு சிறந்த திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக இருப்போம்" என்று அவர் கூறினார். புகார்கள் மற்றும் சிரமத்துக்கு உள்ளவர்கள் உள்ளூர் புகார் மையத்தை 019-3759592, 019-3753980 மற்றும் 019-2742824 ல் தொடர்பு கொண்டு புகார் சொய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.