கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 (பெர்னாமா) - நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (PKPD) அமலிலுள்ள செக்சன் 4 கோத்தா டாமன்சாரா பெட்டாலிங் ஜெயா, பகுதிக்கு தினசரி உணவு தயாரிப்பதற்காக பொது மக்களிடம் நிதி உதவிக்கு கோரிக்கை விடுத்ததாக எழுந்துள்ளதாக புகாரை காவல்துறை மறுத்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறுகையில், நேற்று பி.கே.பி.டி பகுதியில் தினசரி உணவு தயாரிப்பதற்காக நன்கொடை சேகரிப்பு தொடர்பான புலன செய்தி {வாட்ஸ்அப் அப்ளிகேஷன்} குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதில் அந்த பகுதிக்கு 10 நாட்களுக்கு தினசரி உணவு வழங்க கோத்தா டாமன்சாரா காவல்துறை கோரிகை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
BEKIND Malaysia பரிவுகொள் மலேசியா சார்பாக மேபங்க் கணக்கு எண் 564801657304 மூலம் நன்கொடை அளிக்கலாம் என்றும் அந்த புலன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"PKPD அமலிலுள்ள எந்த இடத்திற்கும் எந்த உதவியும் தேவையில்லை என்பதால், புலனத்தின் வழி பரவும் செய்தியை காவல்துறை மறுத்தது," என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.
முகமட் ஃபக்ருதீன், இதில் தனிப்பட்ட ஆதாயத்திற்காக நன்கொடைகளை சேகரிக்க முயன்ற தனிநபர்கள் அல்லது சங்கங்கள் இதன் பின்னணியில் இருப்பதாக அவர்கள் சந்தேகிப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய எந்தவொரு நபரும் விசாரணைக்கு உதவ காவல்துறையில் புகார் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
"ராயல் மலேசிய காவல்துறையின் பெயர் சம்பந்தப்பட்ட எந்த புலன செய்திகளிலும் மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மோசடிகளுக்கு பலியாகும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் காவல்துறையினரிடம் இது குறித்து விவரம் கேட்டு அறிய சமூகம் அறிவுறுத்தப்படுகிறது, ”என்று அவர் கூறினார்.


