ஷா ஆலம், ஆக 6- சிலாங்கூரில் இதுவரை 20 விழுக்காட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தொழிற்சாலை துறையே மூல காரணமாக விளங்குகிறது.அதற்கு அடுத்த நிலையில் சேவைத் துறை, கட்டுமானத் துறை, வணிகம் மற்றும் சமூகம் உள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகடிமான் கூறினார்.
நோய்த் தொற்று சம்பவங்களில் 44 விழுக்காடு கோவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மூலமாக பரவியதாக கூறிய அவர், 22 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிருந்தனர் என்றார்.
மேலும் 20 விழுக்காட்டு நோய்த் தொற்று தொழிலாளர்கள் மூலமாகவும் 14 விழுக்காடு தொழிலாளர்கள் அல்லாதவர்கள் மூலமாகவும் பரவியது என்றார் அவர்.
சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்றுகளில் சுமார் 65 விழுக்காடு நோய்க்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 30 முதல் 35 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மூன்றாம் கட்டத்தில் இருந்தது. 1.8 விழுக்காட்டினர் மட்டுமே நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர் என்றார் அவர்.
ECONOMY
சிலாங்கூரில் நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தொழிற்சாலைகளே மூல காரணம்
6 ஆகஸ்ட் 2021, 11:52 AM


