ஷா ஆலம், ஆக 5- சிலாங்கூரில் 14 லட்சத்து 30 ஆயிரம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான தரவுகளை தனது முகநூலில் பகிர்ந்து கொண்ட அவர், மேலும் 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் அதாவது 70.6 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதாக கூறினார்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 47 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக 217,995 தடுப்பூசிகளும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
வேலையிடங்களில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் கீழ் தொழில் துறையினருக்கு 20 லட்சம் தடுப்பூசிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 500,000 லட்சம் தடுப்பூசிகளையும் மாநில அரசு விநியோகித்துள்ளது.
ECONOMY
சிலாங்கூரில் 30 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்
5 ஆகஸ்ட் 2021, 7:22 AM


