ஷா ஆலம், ஆக 5- மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புக்கிட் மெலாவத்தி தொகுதி இலவச தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளது.விரக்தி, குடும்ப பிரச்சினை,விவாகரத்து, கல்வி, சமூகம் உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் நோக்குவோர் இந்த சேவையை பயன்படுத்தலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
மனநல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளவர்களையும் மன நல நிபுணர்களையும் ஒன்றிணைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தொடர்பு பாலமாக இந்த தொலைபேசி சேவை விளக்குவதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் குடும்பத்தை கவனிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வரும் இல்லத்தரசிகள் உள்பட அனைவரின் மன நலம் மீது அக்கறை செலுத்துவது அவசியமாகும் என்று அவர் கூறினார்.
மனநலப் பிரச்சினை தொடர்பில் உதவி தேவைப்படுவோர் 017-8860253 என்ற எண்களில் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொலைபேசி சேவை
5 ஆகஸ்ட் 2021, 7:11 AM


