ECONOMY

கோல கிள்ளான் சி.ஏ.சி. மையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள்

2 ஆகஸ்ட் 2021, 11:01 AM
கோல கிள்ளான் சி.ஏ.சி. மையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள்

ஷா ஆலம், ஆக 2- கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி செயல்படும் கோல கிள்ளான் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் (சி.ஏ.சி.) வருகையாளர்களுக்கு ஏற்ற வசதிகள் கொண்ட இடமாக திகழ்கிறது.

கோல கிள்ளான் சமூக மண்டபத்தில் செயல்படும் இந்த மையம் பிரதான சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் இடமாக விளங்குகிறது.

தினசரி 2,000 முத 3,000 பேர் இந்த மையத்திற்கு வருகை புரிந்த போதிலும் கார் நிறுத்துமிடம் உள்பட அனைத்து  வசதிகளையும் கொண்ட இடமாக விளங்குவதாக கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரி முகமது அஸ்ரி ஜூல்கிப்ளி கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பரந்த இடத்தை இந்த மையம் கொண்டுள்ளது. கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் நான்கு பணியாளர்கள் மட்டுமே இங்கு  கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போக்குவரத்து நெரிசில் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.