ECONOMY

17,786 சம்பவங்களுடன் மீண்டும் புதிய உச்சம் தொட்டது கோவிட்-19

31 ஜூலை 2021, 9:19 AM
17,786 சம்பவங்களுடன் மீண்டும் புதிய உச்சம் தொட்டது கோவிட்-19

ஷா ஆலம், ஜூலை 31- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோவிட்-19 வரலாற்றில் மிக அதிகமாக அதாவது 17,786 சம்பவங்கள் இன்று பதிவாகின. நேற்று இந்த எண்ணக்கை 16,840 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 6,092 ஆக இருந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 6,400 ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூர், கெடா மற்றும் ஜோகூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை முறையே 1,962, 1,389 மற்றும் 1,144 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு-

நெகிரி செம்பிலான் (929), திரங்கானு (889), பேராக் (775), பினாங்கு (713), பினாங்கு (697), பகாங் (653), கிளந்தான் (580), சரவா (485), புத்ரா ஜெயா (116), பெர்லிஸ் (16), லபுவான் (9).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.