கோத்தா பாரு, ஜூலை 28- ஹாஜ்ஜூப் பெருநாள் முடிந்து சில தினங்களுக்குப் பின்னர் கிளந்தானில் உள்ள பி.கே.ஆர்.சி. எனப்படும் குறைந்த கோவிட்-19 நோய்த் தொற்று கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாநிலத்திலுள்ள 11 பி.கே.ஆர்.சி. மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 முதல் 90 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக கிளந்தான் பி.கே.ஆர்.சி. இயக்குநர் டாக்டர் முகமது ஸூராய்னி முகமது ஜூபிர் கூறினார்.
கிளந்தான் மாநிலத்திலுள்ள பி.கே.ஆர்.சி. மையங்களில் மொத்தம் 2,300 படுக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டு மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை 98 விழுக்காட்டை எட்டிவிட்டது என்றார் அவர்.
நேற்று கிளந்தான்ல் 592 புதிய கோவிட்-19 சம்பவங்களும் ஆறு புதிய தொற்று மையங்களும் அடையாளம் காணப்பட்டன.
பி.கே.ஆர்.சி. மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ சோதனையின் அடிப்படையில் நோயாளிகளை வீடு திரும்ப அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


