ஷா ஆலம், ஜூலை 27- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,117 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 207 பேர் இறந்துள்ளனர். நேற்று இந்த நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,516 ஆக இருந்தது.சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,508 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 6,616 ஆக உயர்வு கண்டுள்ளது.
கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 1,425 இல் இருந்து 2,457 ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கெடாவில் 1,000 சம்பவங்களும் ஜோகூரில் 907 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சபா(741), நெகிரி செம்பிலான்(669), மலாக்கா(674), பினாங்கு (618), கிளந்தான்(592), பேராக் (583), சரவா(405), பகாங்(403), திரங்கானு,(317), புத்ரா ஜெயா(122), லபுவான்(11), பெர்லிஸ்(2).
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 16,117 ஆக அதிகரிப்பு
27 ஜூலை 2021, 2:11 PM


