பூச்சோங், ஜூலை 27- செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் சிலாங்கூர் அரசின் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கின்ராரா தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி இயக்கம் புக்கிட் ஜாலில், அயுராரோ பேலஸ் மையத்தில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
பூச்சோங் இண்டா எம்.பி.பி.ஜே. சமூக மண்டபத்தில் இயங்கும் தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் 2,500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், மீதமுள்ள தடுப்பூசிகள் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
நாளை செலுத்துவதற்கு ஆயிரம் தடுப்பூசிகளை நாங்கள் தயார் செய்துளோம். அத்தடுப்பூசிகள் அந்த குப்பை அகற்றும் நிறுவனப் பணியாளர்களுக்கு குறிப்பாக களத்தில் வேலை செய்வோருக்கு வழங்கப்படும் என்றார் அவர்.


