ஷா ஆலம், ஜூலை 24- அறிகுறி ஏதும் இல்லாத கோவிட்-19 நோயாளிகள் பத்து நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்நோயாளிகள் தங்களைப் பற்றிய விபரங்களை மைசெஜாத்ரா அல்லது செலங்கா செயலி வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையின் பொது சுகாதாரப் பிரிவுக்கான துணை இயக்குநர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் கூறினார் .
நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
எனினும், நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டவர்கள் இணையம் வாயிலாக அல்லது நேரடியாக சி.ஏ.சி. மதிப்பீட்டு மையங்களில் அல்லது அருகிலுள்ள சுகாதார மையங்களில் தங்கள் உடல் நிலையை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


