கிள்ளான், ஜூலை 23- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த 38 முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நோயாளிகளின் உடல்களுக்கு துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் ஏற்பாட்டில் நல்லடக்கச் சடங்கு நடைபெற்றது.
பன்னிரண்டு முஸ்லீம்களின் நல்லடக்கச் சடங்கு சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய இலாகா மற்றும் மலேசிய பொது தற்காப்பு படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனையின் தடயவியல் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
பத்து பேரின் உடல்கள் செலாட் கிள்ளான், மையத்துக் கொல்லையிலும் இருவரின் உடல்கள் ஷா ஆலம், செக்சன் 21 மையத்துக் கொல்லையிலும் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதோடு நெருங்கிய உறவுகளை இழந்த துயரத்திலிருந்து மீள இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டது,


