ஷா ஆலம், ஜூலை 23- சிலாங்கூரில் நேற்று புதிதாக ஐந்து கோவிட்-19 நோய்த் தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் நான்கு வேலையிடங்களை உட்படுத்தியவையாகும்.
கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, கோல சிலாங்கூர் மற்றும் உலு லங்காட்டில் இந்த தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அந்த நான்கு வேலையிட தொற்று மையங்களின் வாயிலாக 578 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்கானது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
சிப்பாங்கிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தை உட்படுத்திய நோய்த் தொற்று சம்பவத்தில் 20 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நாடு முழுவதும் 32 புதிய தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அவற்றில் 21 வேலையிடங்களை மையப்படுத்தியிருந்தது என்றார் அவர்.
ஏழு தொற்று மையங்கள் பொதுமக்கள் வாயிலாகவும் தலா இரு மையங்கள் தனியார் உயர்கல்விக் கூடங்கள் மற்றும் கடும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலமாகவும் பரவியது என அவர் கூறினார்.


