கோலாலம்பூர், ஜூலை 23- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை தினசரி எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் 507,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது முதல் ஒரே நாளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
மொத்தம் 335,977 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 171,073 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகக் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகப்பட்சமாக 460,158 பேர் தடுப்பூசியைப் பெற்றனர்.


